மாதவிடாயின் போதும், பிரசவ உதிரப்போக்கின் போதும் நோன்பு நோற்பது அவர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட நோன்பை அவர்கள் வேறு நாட்களில் நோற்க வேண்டும்.
”மாதவிடாயின் போது விடுபட்ட நோன்பை திரும்ப நோற்கவேண்டும் என்றும், விடுபட்ட தொழுகையை திரும்பத் தொழவேண்டியதில்லை என்றும் நாங்கள் ஏவப்பட்டிருந்தோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, ”மாதவிடாய்க் காரி நோன்பை ‘களா’ச் செய்யவேண்டும் தொழுகையை ‘களா’ச் செய்யவேண்டியதில்லை (என்று உள்ளதே) இது எதனால்? எனக் கேட்டதற்கு அவர், ‘இது போன்ற செய்கைகளில் போதனைகளை நாம் அப்படியே பின்பற்ற வேண்டியதுதான் என்ற அடிப்படையிலேயே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்.
இதனைப் பற்றி ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா ஃபத்வா தொகுப்பு 25ழூ ழூ251 ல் கூறும்போது,
”ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் இரத்தம் ஏற்படும் போது உடலிலுள்ள இரத்தம் வெளியேறுகிறது என்பது பொருளாகும். அவ்வாறு வெளியேறும்போது அவள் பலவீனமடைகிறாள். அந்நேரத்தில் அவளால் நோன்பை சரியான முறையில் நோற்க முடியாது. நோன்பு நோற்ப தற்கு உடல் வலிமையும் அவசியமாகிறது. எனவேதான் மாதவிடாயின்போது விடுபட்ட நோன்பை மற்ற நாட்களில் நோற்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளாள்.