கற்பகாலத்திலும் பாலூட்டும் நாட்களிலும் நோன்பு நோற்பது அவளுக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்
கக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த நேரங்களில் அவள் நோன்பை விட்டுவிடவேண்டும், குழந்தையை மட்டும் பாதிக்கும் என்ற காரணத்திற்காக நோன்பை விட்டுவிடுவாளானால், அவள் விட்டுவிட்ட நோன்பை நோற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு என்ற அடிப்படையில் உணவு வழங்க வேண்டும். அவள் மீது தீங்கு ஏற்பட்டு விடும் என்பதற்காக நோன்பை விட்டிருந்தால்.திரும்ப நோன்பு நோற்றால் போதுமானது, காரணம் குர்ஆனில் 2:184 வது வசனத்தின் படி கற்பினியும், பாலூட்டுபவளும் அடங்கிவிடுவர்.
இமாம் இப்னு கதீர் குறிப்பிடுகிறார். கற்பினி பெண்களும் பாலூட்டும் பெண் களும் தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டுவிடும் என பயந்தால் அவர்கள் நோன்பை விட்டுவிட அவர்களுக்கு அனுமதி உள்ளது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 25ழூ ழூ318 ல் கூறுகிறார்கள்.
கற்பினிப்பெண் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என பயந்தால் அந்நாட்களில் நோன்பை விட்டுவிட்டு வேறு நாட்களில் அதை நோற்பாள். விடுபட்ட நோன்பிற்காக ஒரு நாளைக்கு ஓர் ஏழைவீதம் உணவு வழங்கவேண்டும்.
எச்சரிக்கை :1. சாதாரனமாக தொடர் உதிரப்போக்குள்ள பெண் நோன்பு நோற்க வேண்டும். அவள் நோன்பை விடுவது அவளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா கூறுகிறார். தொடர் உதிரப்போக்கு என்பது எல்லாக் காலத்திலும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. நோன்பு கடமையாக்கப்படும் நேரம் என்பது அதில் இல்லை. எனவே, அதிலிருந்து அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாது. இது போன்று தான் வாந்தி, காயம் மற்றும் கட்டியிலிருந்து(பருவிலிருந்து) இரத்தம் கசிந்து விடுதல், தூக்கத்தில் விந்துவெளிப்படுதல் ஆகியவை போன்றவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதத்தில் அவை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதல்ல. எனவே மாதவிடாயைப் போன்று நோன்பு நோற்பதை தடுக்கக் கூடியதாக இவைகள் இல்லை.
2. மாதவிடாய்க் காரி, கற்பினி, பாலூட்டுபவள் ஆகியோர் இக்காலங்களில் விட்டுவிட்ட ரமளான் நோன்பை அடுத்த ரமளானுக்குள் நோற்று விடவேண்டும், விரைவாக நோற்பது சிறந்தது.
சென்ற ரமளானில் கடமையான நோன்பை நோற்காமல் விட்டுவிட்ட பெண் அடுத்த ரமளான் வரும் முன்பாக அதை நோற்றுக் கொள்ள வேண்டும். காரணம் எதுவுமின்றி அடுத்த ரமளான் வரை நோற்காமல் விட்டுவிட்டால், நோன்பை நோற்பதோடு ஒரு நாளைக்கு ஓர் ஏழை வீதம் உணவும் கொடுக்கவேண்டும். காரணத் துடன் நோன்பை விட்டிருந்தால் களா செய்வது மட்டுமே கடமையாகும்.
நோய், பிரயாணம் காரணமாக நோன்பை விட்ட வளுடைய சட்டமும் மேற்கூறப்பட்ட விளக்கத்துடன் மாதவிடாய்க்காக நோன்பை விட்டவளுடைய சட்டத்தை போன்றுதான்.