கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது கணவனின் அனுமதியின்றி
உபரியான நோன்புகளை நோற்கக் கூடாது.
”கணவன் ஊரில் தங்கி இருக்கும்போது அவனுடைய மனைவி அவனுடைய அனுமதியின்றி நோன்பு நோற்பது கூடாது’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
சில அறிவிப்புகளில், ”ரமளான் நோன்பைத் தவிர” என இடம் பெற்றுள்ளது. (நூல்: அபூ தாவூது)
ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் அனுமதித் தால் அல்லது கணவன் ஊரில் இல்லாமலிருந்தால் அவள் உபரியான நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு, முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் நோன்பு, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள், துல்ஹஜ் மாதம் பத்துநாட்கள், ஒரு நாள் அதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ சேர்த்து அரஃபா நோன்பு போன்ற சுன்னத்தான நோன்புகளை நோற்கலாம். என்றாலும் ரமளான் மாதத்தில் அவளுக்கு விடுபட்டுப் போன நோன்பு இருக்கும் போது, அதை ‘களா’ச் செய்யும் வரை உபரியான நோன்பு களை நோற்பது கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
4. மாதவிடாய்ப் பெண் ரமளானுடைய நடுப்பகலில் தூய்மையாகி விட்டால் அம்மாதத்தைக் கண்ணியப் படுத்தும் முகமாக அந்நாளின் மீதியுள்ள நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு, அந்த நாளுக்குப் பகரமாக வேறு ஒருநாள் அவள் நோன்புநோற்க வேண்டும்.