ஒரு நாளைக் கடந்துவிடாத தூரத்திற்குள் தனியாக பெண்கள் பயணம் செய்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால் தான் செல்ல விரும்பு இடத்திற்குச் சென்று வந்தால்
ஒரு நாளோ அதற்கு அதிகமான நாட்களோ ஆகுமென்றால் தனியாக பயணம் செய்வது கூடாது. இதுபோன்ற நேரங்களில் திருமணம் முடிக்கத்தடுக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்துத் தான் பயணம் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம்மேற்கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (1088)
நபி (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டிய-ல்) எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,என் மனைவி ஹஜ் செய்ய
விருக்கிறாள்''’என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நீ திரும்பிச் சென்று உன் மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3061)
தனக்கும் தன் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் போது எந்த ஒரு பெண்ணும் மஹ்ரமானவர்களின் துணை இல்லாமல் பயணம் போகக் கூடாது. இதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால் தனியாக பயணித்தால் எந்த பாதிப்பும் பெண்ணிற்கு ஏற்படாது என்று கருதும் அளவிற்கு அச்சமற்ற நிலை இருந்தால் அப்போது ஒரு பெண் தனியாக பயணிப்பதில் தவறில்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று பதிலüத்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாதம் (ரலி)
நூல் : புகாரி (3595)
யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனியாக வந்து கஃபதுல்லாஹ்வை தவாஃப் செய்வாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தபகாத்து இப்னு சஃத் என்ற நூலில் 285 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் தனியாக பயணம் செய்வது கூடாதென்றால் தன்னந்தனியாக பயணம் செய்யும் பெண்னை உதாரணமாகக் காட்டி சிலாஹித்துக் கூறியிருக்கமாட்டார்கள்.
எனவே பாதுகாப்புள்ள நிலையில் மஹ்ரமான துணை இல்லாமலேயே பயணம் செய்யலாம் என்று மேலுள்ள ஹதீஸிலிருந்து விளங்குகிறது. பெண்கள் கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்யும் போது பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதி இருந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யலாம்.