Blogger Widgets

பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா?

எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. 
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித்
திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். 
அல்குர்ஆன் (33 : 33)

அறியாமைக்காலத்தில் வெளியில் சுற்றித்திரிந்ததைப் போல் சுற்றித்திரியக்கூடாது என்று நான் உன்னிடத்தில் உறுதிப்பிரமாணம் வாங்கிக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (6554)

பெண் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால் (வழிகெடுப்பதற்காக) ஷைத்தான் அவளை நோக்கிவந்துவிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : திர்மிதி (1093)\

மாôக்க விளக்கப் பொதுகூட்டங்கள் திருமணங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கு உதவும் போராட்டங்கள் போன்ற நல்ல காரியங்களுக்காகவும் தேவையான விஷயங்களுக்காகவும் செல்வதில் தவறில்லை. அவ்வாறு செல்லும் போது பர்தாவை முழுமையாக கடைபிடித்துச் செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் போர்க்களத்திற்கு வந்து காயம்பட்ட போர்வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் பணியை செய்திருக்கிறார்கள். பெருநாள் திடலுக்கு வந்து நன்மையான காரியத்தில் கலந்துகொண்டார்கள்.

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்கüன் காலத்தில் நடந்த போர்கüல் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாüகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்கüடம் "எங்கüல் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகüல் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்கüலும் இறைநம்பிக்கையாளர்கüன் பிரசாரங்கüலும் கலந்து கொள்ளட்டும்!'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி (324)

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ர-) அவர்கள் வெüயே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாம-ருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ர-) அவர்கள் பார்த்துவிட்டு "சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத் தெரியாம-ல்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெüயே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!'' என்று சொன்னார்கள். சவ்தா (ர-) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். சவ்தா (ர-) அவர்கள் வீட்டினுள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெüயே சென்றேன். உமர் (ர-) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு "வஹீ' (வேதவெüப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தேவைக்காக வெüயே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4795)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.