இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல் என்பது பொருள். இறையில்லத்தில் இறைவனை வணங்குவதற்காக மாத்திரம் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படுகிறது. இவ்வணக்கத்தை செய்பவர்கள்
அவசியமானத் தேவைகளுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்கு பள்ளியை விட்டும் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இஃதிகாஃப் இருக்கக்கூடியவர் நோயாளியை நலம் விசாரிப்பதற்கு (வெளியில்) செல்லாமல் இருப்பதும் ஜனாஸாவில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் பெண்னை தொடமல் இருப்பதும் அவளை கட்டியணைக்காமல் இருப்பதும் மிக அவசியமானவைகளுக்குத் தவிர மற்ற தேவைகளுக்கு வெளியில் செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும். நோன்புடனேத் தவிர (தனியாக) இஃதிகாஃப் கிடையாது. மக்கள் ஒன்றுசேருகின்ற பள்ளியிலேத் தவிர (வேறு இடத்தில்) இஃதிகாஃப் கிடையாது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அபூதாவுத் (2115)
இஃதிகாஃப் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். எனவே பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலிலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலிலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் காலை தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு, "இவை என்ன?'' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!'' என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2041)
பள்ளியில் நெருக்கடி ஏற்படும் அளவில் அதிகமான கூடாரங்களை அமைத்துக்கொண்டதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்னாரின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் குசும்பப்பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும்போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (310)
அன்னிய ஆணுடன் எந்த ஒரு பெண்ணும் தனியாக இருக்கக்கூடாது என்பதால் இதைத் தவிர்க்க இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது நல்லது.