பொதுவான சட்டங்கள் :
1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :
1400 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரபியர்களும் பிற இனமக்களும் அறியாமையில் வீழ்ந்திருந்தனர். இஸ்லாத்திற்கு முன்புள்ள காலம் என இதனையே நான் குறிப்பிடுகிறேன். மனிதர்களை நேர்வழிப்படுத்தக்கூடிய இறைத்தூதர்கள் இல்லாதிருந்து, எல்லா வழிகளும் அழிந்து போய்விட்ட காலம். அப் போது அல்லாஹ் அவர்களின் பால் திரும்பிப்பார்த்தான்.
”வேதம் அருளப்பட்டவர்களில் சிலரைத் தவிர அரபியர்கள் மற்றும் அரபியர் அல்லாதவர்கள் உள்ளிட்டு அனைவரின் மீதும் இறைவன் கோபப்பட்டான்.” (அல் ஹதீஸ்)
இக்காலக் கட்டத்தில் பெண்ணினம் தன் உணர்வுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தது. குறிப்பாக அரபிய இனப் பெண்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளாம் இருந்தார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பவர்களாய் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தனர். வேறு சிலர் (தங்களின் பெண்களையே) இழிவாகவும் கேவலமாகவும் உயிர் வாழ அவர்களை விட்டு வந்தனர்.
இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: ”அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந் துள்ளது என நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவன் கோபமடைந்துவிடுகிறான். எதனைக் கொண்டு அவன் நற்செய்தி கூறப்பட்டானோ (அதைத் தீயதெனக் கருதி) அக்கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். இழிவோடு அதை உயிர் வாழவைப்பதா, அல்லது (உயிரோடு) அதை மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மா னிப்பது மிகவும் கெட்டது?” (அல்குர்ஆன் 16:58,59)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ”உயிருடன் புதைக்கப் பட்டவள் ( பெண்குழந்தை), ‘எந்தக் குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்’ என வினவப்படும் போது.” (அல்குர்ஆன் 81:8,9)
சிசுவதை என்பது பிறந்த பெண்குழந்தையை உயிரோடு பூமிக்குள் புதைத்து கொலை செய்வதாகும். அப்படியே ஒருபெண் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்து வாழ ஆரம்பித்தாலும், அவள் மிகவும் இழிவான முறையில்தான் வாழமுடியும். அவளுடைய உறவினர்கள் எவ்வளவு தான் சொத்துக்களை விட்டுச் சென்றாலும் அதில் அவளுக்கு வாரிசுரிமை இருக்கவில்லை. அவள் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தேவையுடைய வளாக இருந்தாலும் சரியே. அன்றைய மக்கள் ஆண் களுக்கு மட்டுமே வாரிசுரிமை வழங்கிவந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால் இறந்துபோன கணவன் விட்டுச் சென்ற அனந்தரச் சொத்துக்களில் ஒன்றாகப் பெண்ணும் கருதப்பட்டாள். அதிகமான பெண்கள் ஒரே கணவனின் கீழ் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். காரணம் அன்றைய ஆண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய பெண்களை மட்டும் மனைவியாக வைத்துக் கொள்வதில்லை, மேலும், பெண்களுக்கு எதிராக இளைக் கப்படும் கொடுமைகளை யாரும் கண்டு கொள்ளா மலேயே இருந்து வந்தனர்.
2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :
இஸ்லாமிய மார்க்கம் அவர்களிடத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பெண்களுக்கு இளைக்கப்பட்டு வந்த கொடுமைகள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப் பட்டன. பெண்ணும் மனித இனத்தின் ஓர் அங்கம்தான் என்ற நிலையை இஸ்லாம் அவளுக்கு மீட்டிக் கொடுத்தது.
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்.” (அல்குர்ஆன் 49:13)
மனித இனம் என்ற அடிப்படையில் பெண் ஆணுக் குச் சமமானவள். அவள் புரியும் நன்மை தீமைக்குரிய கூலி யைப் பெறுவதிலும் ஆணுக்குச் சமமாகவே இருக்கிறாள் என இஸ்லாம் கூறுகிறது.
”இறைநம்பிக்கையுள்ள ஆணோ, பெண்ணோ யார் நற்செயலைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) தூயமுறையிலான வாழ்க்கையை வாழச் செய்வோம். இன்னும், (மறுமையில்) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.” (அல்குர்ஆன் 16:97)
”நயவஞ்சகத்தன்மையுள்ள ஆண்களையும், நயவஞ் சகத்தன்மையுள்ள பெண்களையும், இணை வைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக.” (அல்குர்ஆன் 33:73)
இறந்துபோன கணவன் விட்டுச் செல்லும் அனந்தரச் சொத்துக்களில் பெண்ணும் ஒன்று எனக் கருதப்பட்டு வந்ததை அல்லாஹ் தடை செய்துவிட்டான்.
”இறைநம்பிக்கையாளர்களே! பெண்களை (அவர்களின் மனம் பொருந்திவராத நிலையில்) நீங்கள் பலவந்தப் படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்க ளுக்குக் கூடாது.” (அல்குர்ஆன் 4:19)
ஒரு பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல் படுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. சொத்துரிமையில் அவளைப் பங்குதாரராக இஸ்லாம் ஆக்கியுள்ளது; அவளை வாரிசுப் பொருளாகக் கருதவில்லை. தன் உறவினர் விட்டுச்செல்லும் சொத்திலும் அவளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ”பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகம் உண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவி னரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகம் உண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந் தாலும் சரி, இது (இறைவனால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.” (அல்குர்ஆன் 4:7)
(சொத்துப்பங்கீட்டில்) ”உங்கள் மக்களில் இரண்டு பெண்களுக்குக்கிடைக்கும் பங்கு ஓர் ஆணுக்குக் கிடைக்கும் என அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான், பெண்கள் மட்டுமே இருந்து, அவர்கள் இரண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர் (இறந்துபோனவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும், ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.” (அல்குர்ஆன் 4:11)
ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் நிலையில் வாரிசாம், சொத்தில் பங்கு பெறக்கூடியவள் என இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது.
திருமணத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண் அதிகப் பட்சமாக ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மனைவியரிடையில் நீதத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அடிப்படையான நிபந்தனையாகும். மனைவியரிடத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
”நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண் களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 4:19)
பெண்ணுக்கு மஹர் என்ற ஜீவனாம்சத்தை (மணக் கொடையை)க் கொடுத்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். மணமகன் வாக்களித்த ஜீவனாம்சத்தை மணப்பெண் தானாக முன் வந்து விட்டுக் கொடுத்தால் அன்றி, அதை முழுமையாகவே அவளுக்கு வழங்கி விடவேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
”நீங்கள் (மணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால். அதைத் தாராளமாக மகிழ்வு டன் புசியுங்கள். (அதாவது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)” (அல்குர்ஆன் 4:4)
ஒரு பெண், தன் கணவன் வீட்டில் பொறுப்புள்ள வளாக, ஆலோசனைகளை வழங்குபவளாக, தீயவற்றிலிருந்து வீட்டாரை விலக்கக் கூடியவளாக, தன் குழந்தை களை வழிநடத்திச் செல்லும் குடும்பத்தலைவியாக இருக்கவேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.
”ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்புடையவளாவாள். அந்தப் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.”
கணவன் தன் மனைவிக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.
இன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.
இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.
”தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப் பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.” (அல்குர்ஆன் 4:27)
இதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ் லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல் படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளா கவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும். நாடகங் களில் நடிகைகளாக இருக்கவேண்டும். இன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர். மஞ்சள் பத் திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளி யிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ் தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும், விற்பனையை அதிகரித்துக் கொள்வ தற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன் படுத்தி வருகின்றனர். ஜவுளிக் கடைகளில் ‘ஷோகேஸ்’ பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத் தில்தான் அமைத்துள்ளனர்.
பெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ”நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்” என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மன நிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின் கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன.
4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.
1. பணிக்குச் செல்லும் ஒரு பெண், தான் மேற்கொள்ளும் அப்பணியை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந் தாலோ, அவளுக்கு அப்பணியைச் செய்து கொடுப் பதற்கு ஆண்கள் யாரும் இல்லாதிருந்தாலோ அல்லது அப்பெண்ணின் பணி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலோ வெளியில் செல்லலாம்.
2. தன் வீட்டில் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்ட பின்னரே பெண்கள் வெளிவேலையில் ஈடுபட வேண்டும்.
3. பெண்களுக்கிடையில்தான் அவள் தன் வெளி வேலை களை அமைத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல், மருத்துவம் செய்தல், பெண் களுக்காக மட்டும் நர்ஸாக பணியாற்றுதல் போன்ற பணிகளை ஆண்களுடன் இரண்டறக் கலந்துவிடாது செய்து கொள்ளவேண்டும்.
4. மார்க்கக் கல்வியைக் கற்பது அவள் மீது கட்டாயக் கடமையாக உள்ளது. இதை அவள் வெளியில் சென்று கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அது
பெண்கள் வட்டத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். பள்ளிவாசல் போன்ற இடங்களில் நடைபெறும் மார்க்க விளக்கக் கூட்டங்களில் பங்கு கொள்வதில் தவறில்லை. ஆனால் அவள் தன் அழகு அலங்காரங் களை மறைத்தாக வேண்டும். ஆண்களை விட்டும் ஒதுங்கியவளாக இருக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களைப் போன்று பள்ளிவாச லுக்குச் சென்று நல்லமல்கள் புரியவேண்டும். இஸ்லாமியக் கல்வியைக் கற்கவேண்டும்.