Blogger Widgets

பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது


1. பெண்ணின் உடல் அலங்காரம் :
பெண்களின் இயற்கையான பண்புகளோடு தொடர் புள்ளவற்றையே அவளிடமிருந்து எதிர்பார்க்கவேண்டும். நகம் வெட்டுவதும் அதை வழக்கமாக தொடர்ந்து செய்து வருவதும் நபிவழியாக இருக்கிறது. இவை ஹதீஸில் வந்துள்ள மனிதன் இயல்பாகவே செய்யக்கூடிய விஷயங் களாக உள்ளன. நகத்தைக் களைவதால் சுத்தம் ஏற்படு கிறது. அழகு கிடைக்கிறது. அது நீண்டதாக வளர்ந் திருப்பதில் அவலட்சனம் இருக்கின்றது. நகத்தைக் களையாமல் விட்டு விடுவதால் மிகப்பெரிய (தொல்லைகள்) ஏற்படுகின்றன. கோரப் பிராணிகளுக்கு ஒப்பாக (விரல்கள்) ஆம்விடு கிறது. அதற்கு கீழாக அழுக்கு சேர்ந்து விடுகிறது. அதில் தண்ணிர் சென்றடைவதைத் தடுக்கிறது, நபிவழியை மறந்து, இறைமறுப்பாளர் களைப் பின்பற்றி நகத்தை நீளமாக வளர்க்கும் ஒரு வித சோதனைக்கு சில பெண்கள் ஆளாம்யுள்ளனர்.
அக்குள்முடி, மர்மஸ்தான முடியைக்களைவதும் பெண்களுக்கும் சுன்னத்தாக உள்ளது. அதில் அழகும் இருக்கிறது. வாரம் ஒரு முறைக்களைய வேண்டும். முடியாவிட்டால் நாற்பது நாட்களுக்கு ஒரு முறையாவது களைதல் சிறந்ததாகும்.
2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : 
அ. முஸ்லிம் பெண் தன் தலைமுடியை நீளமாக விட வேண்டும். காரணமின்றி தலையை மொட்டையடிப்பது விலக்கப்பட்டுள்ளது.வூதி அரேபியாவின் மார்க்க தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷேக் அவர்கள் கூறுகிறார்கள்.
”பெண்கள் தங்கள் தலைமுடியை மளித்தல் கூடாது.”
”பெண் தன் தலைமுடியை மளிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்” என அலீ ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். (நூற்கள்: நஸயீ, பஸ்ஸார் மற்றும் இப்னுஜரீர்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளதாக ஹதீஸில் ஒரு விஷயம் வருமானால் அது விலக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் குறிக்கும். அதற்கு மாற்றமமான இன்னொரு விஷயம் வந்தாலே தவிர.
முல்லா அலிகாரி அவர்கள் ‘மிஷ்காத்’ என்ற நூலின் விரிவுரையான தன்னுடைய ‘மிர்காத்’ என்ற நூலில் கூறுகிறார். ”பெண் தன் தலைமுடியை மளிப்பது கூடாது என்பது எதற்காகவென்றால் பெண்கள் கூந்தலை விடுவது தோற்றத்திலும் அழம்லும் ஆண்கள் தாடி விடுவதற்கு ஒப்பானதாகும்.” (ஷேக் முஹம்மதுபின் இப்ராஹீம் ஃபத்வா தொகுப்பு 2- 49)
ஒரு பெண் தன் தலைமுடியை நீளமாக விடுவது சிரமமானதாகவோ, அதைப் பராமரிப்பதற்கானச் செலவை மேற்கொள்வது அவளுக்கு முடியாமலோ இருக்குமானால் தேவையான அளவு அலங்காரத்தை நோக்கமாகக் கொள்ளாது. தலைமுடியை குறைத்துக் கொள்வதில் தவறில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் சில மனைவிமார்கள், அலங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும், நீண்ட முடி வளர்க்கும் தேவையற்று இருந்ததாலும் தங்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டார்கள்.
அதேநேரத்தில் இறைமறுப்பாளர்கள் மற்றும் தீயவர் களுக்கு ஒப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, ஆண்களுக்கு ஒப்பாக தோற்றமளிக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு பெண் தன் தலைமுடியைக் குறைப் பாளானால் அது தடை செய்யப்பட்டதாகும். பொதுவா கவே இதைத் தடை செய்வதற்குண்டான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அலங்காரத் திற்காக அவ்வாறு செய்வாளானால் நாம் அறிந்தவரை அது அனுமதிக்கப் படாததாகும்.
முஹம்மத் அமீன் சின்கீதீ ‘அள்வாஉல் பயான்’ எனும் குர்ஆன் விளக்கவுரை நூலில் குறிப்பிடுகிறார்.
”தற்போது அதிமான நாடுகளில் பழக்கத்தில் காணப்படுகின்ற பெண்கள் தங்கள் தலைமுடியை முழுமையாக வெட்டிக் கொள்வது என்பது இஸ்லாமிய பெண்களும் இஸ்லாத்திற்கு முற்காலத்திலுள்ள அரபியப் பெண்களும் செய்துவந்த பழக்கத்திற்கு நேர் மாற்றமான கலாச்சாரமாகும். இது மார்க்கத்திலும் பண்பாட்டிலும் பரந்து விட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் தங்கள் தலை முடியைக் குறைத்து குட்டையாக ஆக்கிக் கொள்வார்கள். என ஹதீஸில் வந்ததன் விளக்கம் என்னவென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர் களின் மனைவிமார்கள் அவர்களுக்காக தங்களை அலங்க ரித்துக் கொள்வார்கள். அவர்களின் தலை முடிதான் மிக வும் அழகானதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர் களின் மனைவிமார்களுக்கென தனிச்சட்டங்கள் உள் ளன. இந்த சட்டங்களில் பூமியில் உள்ள எந்த ஒருபெண் ணும் கூட்டாக முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத் திற்குப்பின் அவர்களின் மனைவிமார்களை வேறு யாரும் திருமணம் செய்யமுடியாது. ஆசையில்லாத அளவிற்கு அவர்கள் திருமணத்திலிருந்து நிராசையாகிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதர் என்ற காரணத்தினால் அப்பெண்களின் மரணம் வரை இத்தாவில் இருக்கின்ற பெண்களைப் போன்றிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு உகந்ததல்ல, மேலும் அவருடைய மனைவி களை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமான காரியமாகும்.” (அல்குர்ஆன் 33:53)
ஆண்களிலிருந்து முழுமையாகவே அவர்கள் நிரா சையாகிவிட்டதால் மற்ற பெண்களுக்கு அனுமதிக்கப் படாத சில விஷயங்கள் இவர்களுக்கு சலுகை வழங்கப் படுவதற்கு காரணமாக இருக்கலாம். (அல்வாஉல் பயான் 5: 598 – 601)
பெண்கள் தன் தலை முடியைப் பாதுகாக்க வேண்டும், அதை கண்காணிக்கவேண்டும் அதை கோர்வையாகப் பிண்ணிப்போடவேண்டும். முடியை தலைக்கு மேலோ அல்லது தலைக்குப் பின் பக்கமோ கொண்டை போன்று குவித்து வைப்பது கூடாது.
மேலும், இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பில் கூறுகிறார்கள். சில மோசமான பெண்கள் தங்கள் தலைமுடியை ஒன்றாகச் சேர்த்து ஒரே கூந்தலாக்கி தங்கள் இரண்டு புஜத்திற்கிடையில் தொங்கவிடுகின்றனர். (பக்கம் 22ழூ ழூ பக்கம் 145)
ச¥தி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் அவர்கள் கூறுகிறார்கள்: இக்காலத்தில் சில முஸ்லிம் பெண்கள் தங்கள் தலை முடியை ஒரு ஓரத்திலிருந்து சீவி முடியை ஒன்று சேர்த்து தலைக்குப் பின் பக்கமாக விடுவதும் அல்லது தலைக்கு மேலே சேர்த்துவைப்பதும் ஃபிரஞ்ச் கலாச்சாரமாகும், இவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு செய்வது இறை மறுப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
”என் சமுதாயத்தில் இரண்டு கூட்டத்தினர் நரக வாசிகளாக இருக்கின்றனர். அவர்களை நான் பார்த்ததில்லை (அதாவது அவர்கள் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்). ஒரு சாரார் மாட்டு வாலைப் போன்ற சாட்டையை தங்களின் கையில் வைத்துக் கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமானவர்களாகக் காட்சியளிக்கும் பெண்கள்; அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள் பிறரையும் அவர்கள் பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை சாய்ந்த ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும் அவர்கள் சுவர்க்கம் செல்லவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணம் நீண்ட தூரத் திலிருந்து வீசும்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் றார்கள்” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
ஆடிஆடி நடப்பார்கள் என்பதன் பொருள், தவறான விபச்சாரிகள் தங்கள் தலையை சீவிக் கொள்வது போன்று இவர்கள் தங்கள் தலையைச் சீவிக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றபெண்களுக்கும் அவ்வாறு சீவிவிடுவார்கள். இவ்வாறு செய்வது ஃபிரஞ்ச்காரர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களின் கலாச்சாரமாகும்.
முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை மொட் டை அடிப்பது எவ்வாறு கூடாதோ அவ்வாறே காரண மின்றி தலைமுடியைக் குறைத்துக் கொள்வதும் கூடாது. ‘விக்’ மற்றும் ‘சவுரி’ போன்ற ஒட்டு முடிகள் வைத்துக் கொள்வதும் கூடாது.
”பிறருக்கு தன் முடியுடன் வேறு முடியைச் சேர்த்து வைப்பவள், தன் முடியுடன் வேறு முடியை சேர்க்கும் படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு செய்வதனால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு கள் ஏற்படுகின்றன. ‘டோப்பா’ மற்றும் ‘விக்’ இந்த வகை யைச் சார்ந்ததுதான்.
”முஆவியா ரளியல்லாஹு அன்ஹு ஒரு முறை மதீனாவிற்கு வந்தபோது மக்களுக்கு பிரசங்கம் செய்தார்கள். அப்போது முடிக் கற்றை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, ‘உங்கள் பெண்களுக்கு என்ன நேர்ந்தது? இதுபோன்ற முடிகளை எல்லாம் அவர்கள் தங்கள் தலையில் இணைக்கின்றனர்.’ ‘எந்த ஒரு பெண்ணாவது தன் தலைமுடியுடன் வேறு முடி யைச் சேர்த்து வைப்பாளானால் அது ஏமாற்றம், மோசடி செய்யக்கூடியதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” எனக் கூறினார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஆ. ஒரு முஸ்லிம் பெண் தன் புருவ முடிகள் முழுவதுமாக வோ, கொஞ்சமாகவோ களைவது தடை செய்யப்பட்டுள்ளது. கத்தியால் மளிப்பதோ, கத்திரி யால் வெட்டுவதோ கூடாது.
”புருவ முடியை முழுவதுமாகவோ, கொஞ்சமாக வோ நீக்கக்கூடியவளையும், தனக்கு நீக்கிவிடும் படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.”
இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாகும். மனிதர்களிடத்தில் இவ்வாறு மாற்றங்களைத் தான் செய்யப்போவதாக ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் எடுத்துள்ளான். அதையே இன்று அவன் செயல்படுத்தியும் வருகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: ”இன்னும் அல்லாஹ்வுடைய படைப்புகளின் கோலங்களை மாற்றும்படி (மனிதர்களை) ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்.” (அல்குர்ஆன் 4:119)
”பச்சைக் குத்திக்கொள்ளக்கூடியவளையும், பிறருக்கு பச்சைக் குத்துபவளையும், புருவமுடியை எடுப்பவ ளையும், பிறருக்கு எடுத்து விடுபவளையும், அழகிற்காக பற்களுக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி அல்லாஹ் வின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்துபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள், என அப்துல் லாஹ் இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு, ‘இறைத் தூதர் சபித்தவர்களை நானும் சபிக்கக்கூடாதா? இது அல்லாஹ்வின் வேதத்திலும் உள்ளதே’ என்றும் அவர்கள் கூறிவிட்டு, ‘இறைத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுக் கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் அவர் உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டும் நீங்கள் விலம்க் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 59:7) என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதினார்கள். (நூல்: திர்மிதி)
இறைவனின் சாபத்தை உண்டாக்கும் பெரும் பாவங் களில் ஒன்றான இவ்விஷயத்தில் அதிகமான பெண்கள் இன்று சிக்கியுள்ளனர். புருவமுடியை நீக்குவது அன்றாட முக்கிய வேலைகளில் ஒன்றாம்விட்டது. ஒரு பெண்ணை இவ்வாறு செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவன் தூண்டினாலும் அவள் அவனுக்குக் கட்டுப்படக்கூடாது. ஏனெனில் பாவமான காரியங்களில் கட்டுப்படுதல் மார்க்கமாக இல்லை.
இ. அழகுக்காக ஒரு பெண் தன் பற்களைத் தீட்டி அவற்றிற்கு இடையில் இடைவெளி ஏற்படுத்துவதும் தடுக்கப்பட்டதாகும். அதே நேரத்தில் பற்களுக்கிடை யில் இயற்கையாகவே குறை இருக்குமானால் அதைப் போக்கிக் கொள்வதற்காக ஒழுங்குபடுத்திக் கொள் வதும், பற்களில் வேறு ஏதேனும் புளு அரித்திருந்தால் அவற்றைச் சீர்செய்து கொள்வதும் தவறாகாது. இது, பற்களில் காணப்படும் குறைகளைப் போக்குவதற்காக பல் மருத்துவ நிபுணர்கள் செய்யும் சிம்ச்சையாகும்.
ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

‘தன் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடியவ ளையும், பச்சை குத்தும்படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.
பச்சைக்குத்துவது என்பது ஊசி போன்ற பொருளால் கை அல்லது முகம் போன்ற உறுப்பில் கூறை ஏற்ப டுத்தி அந்த இடத்தில் சுர்மா, மை போன்றவற்றை வைத்து அடையாளமிடுவது, இது விலக்கப்பட்டதும், பெரும்பா வங்களில் ஒன்றுமாகும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித் துள்ளார்கள் என்றால் அது பெரும் பாவமாகத்தான் இருக்கவேண்டும்.
2. பெண்கள் முடிக்கு சாயமடிப்பது, நகை அணிவது பற்றிய சட்டம் :
1. பெண்கள் முடிக்கு சாயமடிப்பதும், நகை ஆபரணம், அணிவதும், திருமணமான பெண்கள் கைகளிலும் கால்களிலும் மைலாஞ்சி இடுவதும் அனுமதிக்கப் பட்டதாகும். இது குறித்து பிரபலமாhன ஹதீஸ்கள் உள்ளன. என இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் 1ழூ ழூ324 குறிப்பிடுகிறார்கள்.
ஒரு பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் வந்து மைலாஞ்சி இடுவதைப் பற்றிக்கேட்டாள். அதில் எந்த தவறுமில்லை, ஆனால் நான் அதை விரும்பவில்லை, காரணம் என் அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் வாடையை வெறுப்பவர்களாக இருந்தார்கள். (நூல்: நஸயீ)
மேலும்,ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார், ”ஒரு பெண் திரைக்கு அப்பால் நின்று கொண்டு தன் கையில் ஒரு கடிதத்தை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நீட்டினாள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கையை மூடிக் கொண்டு அது ஆணுடைய கையா அல்லது பெண்ணின் கையா என்பது எனக்குத் தெரியாது, என்றார்கள், அது பெண்ணுடைய கைதான் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அப்போது ‘நான் பெண்ணாக இருந்திருந் தால் உன்னுடைய நகங்களை மைலாஞ்சியால் சாயமிட்டி ருப்பேன்’ என அந்தப் பெண்ணிடம் கூறினார்கள். (ஆதாரம்: அபூ தாவூத, நஸயீ)
ஆனால் தண்¡ர் செல்லமுடியாத அளவிற்கு தடையாக இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது.
2. பெண்கள் நரைத்த தலைமுடியை கருப்பு அல்லாத நிறங்களைக் கொண்டு சாயமிடுவது அனுமதிக்கப் பட்டுள்ளது. கருப்புசாயமிடுவதை பொதுவாக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.
இமாம் நவவீ குறிப்பிடுகிறார்கள்: ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் முடிக்கு கருப்பு சாயமிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என்று பாகுபாடு கிடையாது. (ரியாலுஸ்ஸாலிஹீன், மஜ்மூவு)
ஒரு பெண் தன் கருத்த தலைமுடியை வேறு நிறமாக மாற்றுவதற்கு சாயத்தைப் பயன்படுத்துவதும் கூடாது, அதற்கு எந்தத் தேவையும் இல்லை, காரணம் முடியைப் பொறுத்தவரையில் கருப்பாக இருப்பது தான் அழகு, கருப்பாக இருக்கும் முடியை வேறு நிறமாக மாற்றுவது நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.
3. பெண் தங்கம் வெள்ளிபோன்ற ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்வது அனுமதிக்கப்பட் டுள்ளது. இது அறிஞர்களின் ஏதோபித்த முடிவாகும். ஆனால் அன்னிய ஆடவர்களுக்கு தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவது கூடாது, மறைக்கவேண்டும். குறிப்பாக வீட்டின் வெயியே செல்லும்போதும், ஆண்களின் பார்வைபடும் போதும் அதை மறைத்துக் கொள்ளவேண்டும், காரணம் அது தவறுகள் நடக்கக் காரணமாகிறது. ஆடைகளில் அடியில் உள்ள காலின் நகைகளின் சப்தத்தையே ஆண்கள் கேட்கும் அளவிற்கு வெளிப்படுத்துவது கூடாது என்று இருக்கும்போது, வெளிப்படையாக அணியும் ஆபரணங்களையும் (வெளியாக்குவது) கூடாது தான்.
அல்லாஹ் கூறுகிறான்: பெண்கள் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து ஏதேனும் வெளிப் படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டிதட்டி நடக்கவேண்டாம்.” (அல்குர்ஆன் 24:31)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.