Blogger Widgets

பிரசவ இரத்தம்


பிரசவ இரத்தம் என்பது பிரசவத்தின் போதும், பிரசவம் முடிந்த பின்பும் கற்பப்பையிலிருந்து வெளியா கும் இரத்தமாகும்.
இந்த இரத்தம் கற்பக் காலத்தில் கற்பப்பையில் தேங்கியிருந்த இரத்தமாகும். பிரசவம் ஆம்விட்டால் இந்த இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும்.
பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியாகும் பிரசவத்தின் அடையாள இரத்தமும் பிரசவ இரத்தமாகவே கருதப்படும். இது அதிகமாகவும் பிரசவம் நிகழும் போது தான் வெளியாகும்.
மனித தோற்றம் பெற்று குழந்தை வெளியாவது பிரசவம் எனப்படும். மனித தோற்றம் பெறுவதற்கு குறைந்தது 81 நாட்களோ, அதிகப்படியாக மூன்று மாதங்களோ ஆகும். இதற்கு முன்பாக (81 நாட்கள்) ஏதும் வெளியா னால் அதோடு இரத்தம் வந்தால் அந்த இரத்தத்தை உதிரப்போக்கு இரத்தமாகவே கருத வேண்டும். இது கெட்ட இரத்தம், இதற்காக தொழுகை, நோன்பைவிட வேண்டியதில்லை, சாதாரனமான உதிரப் போக்குடைய பெண்ணின் சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படும் இரத்தம் அதிகப்படியாக நாற்பது நாட்கள் வரை நீடிக்கும்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிரசவத்தினால் உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் நாற்பது நாட்கள் தொழாமல் இருந்துவிடுவார்கள்” என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)
நாற்பது நாட்களுக்கு முன் இரத்தம் நின்று தூய்மையாகிவிட்ட பெண் குளித்துத் தொழுகையைத் தொடர வேண்டும். பிரசவ இரத்தத்தின் குறைந்த நாட்கள் எத்தனை என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை.
நாற்பது நாட்கள் கழிந்த பின்பும் இரத்தம் நிற்காதி ருந்தால் அந்நாட்கள் அவளுடைய மாதவிடாய் நாட் களாக இருக்குமானால் அந்த இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதவேண்டும். மாதவிடாய் நாட்களாக இல்லாமலிருப்பின் அதை சாதாரனமான உதிரப்போக் காக எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது நாட்கள் கழிந்த பின்னர் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கக்கூடாது.
பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்
பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.
1. பிரசவ இரத்தம் வெளியாகும்போது அவளுடன் அவளுடைய கணவன் உடலுறவு கொள்வது கூடாது. உடலுறவைத் தவிர மற்ற இன்பங்களை அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. பிரசவ இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை வலம் வருவது கூடாது.
3. பிரசவ இரத்தின்போது விடுபட்டுப்போன நோன்பு களை மற்றநாட்களில் நோற்கவேண்டும். பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்கள் குர்ஆனை தொடு வதும் அதை ஓதுவதும் கூடாது, குர்ஆன் மறந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலே ஒழிய
4. மாதவிடாய் இரத்தம் நின்ற பெண் குளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே பிரசவ இரத்தம் நின்றதும் குளிப்பது பெண்கள் மீது கடமையாகும்.
இதற்கான ஆதாரங்கள்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிரசவமான பெண் நாற்பது நாட்களுக்கு தொழாமலிருந்து விடுவாள்கி என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூ தாவூது, நஸயி, இப்னுமாஜா, திர்மிதி)
இமாமுல்மஜ்த் இப்னு தைமிய்யா முன்தகா எனும் தம் நூலில் 1ழூ ழூ184 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸின் பொருள் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண் நாற்பது நாட்கள் தொழாமல் இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறாள். நபி(ஸல்) அவர்களின் மனைவி அறிவிக்கும் செய்தி முரண்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மாதவிடாய், பிரசவ உதிரப்போக்கு விஷயத்தில் ஒரு காலத்திலுள்ள பெண் களின் பழக்கம் ஒன்று பட்டிருக்க முடியாது என்றே கூறவேண்டும்.
”நபி(ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் பிரசவத்தின்போது நாற்பது நாட்கள் (காத்து) இருப்பார் கள். அந்நாட்களின் விடுபட்டுப்போன தொழுகையைத் தொழுது கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் அப்பெண் களுக்குக் கட்டளையிட மாட்டார்கள்” என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
குறிப்பு: ஒருபெண்ணிற்கு பிரசவ உதிரப்போக்கு நாற்பது நாட்களுக்கு முன்பே நின்றுவிடுமானால் அவள் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றிய பின் நாற்பது நாட்கள் முடிவதற்குள் திரும்பவும் உதிரப் போக்கு ஏற்படுமானால் அது பிரசவத்தினால் ஏற்படும் உதிரப்போக்காகவே கருதப்படும். உதிரப்போக்கு நின்றிருந்த நாட்களில் தொழுத தொழுகை மற்றும் நோன்பு போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும். செய்து முடித்து விட்ட அக்கடமைகளை மீண்டும் செய்ய வேண்டிய தில்லை.

Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.