Blogger Widgets

மாதவிடாய் நிற்க மருந்து உண்ணுதல்


ஒருபெண் தன்னுடைய ஆரோக்கியம் பாதிப்பிற் குள்ளாகமல் இருக்கும் வரை அவள் மருந்து உண்ணுவதில் தவறு இல்லை. மருந்துகள் சாப்பிடுவதன்
மூலம் மாதவிடாய் இரத்தம் நின்றிருக்கும் நாட்களில் தொழுகை மற்றும் நோன்பு போன்ற வணக்கங்களை அவள் நிறைவு செய்யவேண்டும். சுத்தமான மற்ற பெண்களுக்கான சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
கருக்கலைப்பு :இஸ்லாமிய பெண்மணியே! உன்னுடைய கருவறை யில் அல்லாஹ் படைத்ததை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உனக்கு உள்ளது அதை நீ மறைப்பது கூடாது.
”அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அந்தப் பெண் கள் நம்புவார்களாயின் தங்கள் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.” (அல்குர்ஆன் 2:228)
எந்த நிலையிலும் கருக்கலைப்புச் செய்வதற்கு சூழ்ச்சி செய்யாதே! கர்ப்பமான நிலையில் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது உனக்கு கடினமானதாக இருக்கு மானால் அல்லது கருவுக்கு கேடு ஏற்படுமானால் அம்மாதத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ உனக்கு சலுகை வழங்கியுள்ளான். இக்காலத்தில் பரவியுள்ள கருக்கலைப்பு மற்றும் அறுவைச் சிம்ச்சைகள் தடுக்கப் பட்டதாகும். கருவறையில் உள்ளதற்கு உயிர் ஊதப் பட்டப்பின்னர் கருக்கலைப்பால் கருவான அக்குழந்ததை இறந்துவிடுமானால் நியாயமான காரணமின்றி உயிரைக் கொலைசெய்த குற்றத்திற்கு அப்பெண் ஆளாம் விடுகின்றாள். இதன் மூலம் குற்றவியல் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளதோ அதைப் பெற்றுக் கொள்வதற்கு அவள் தகுதியாகிவிடுகிறாள். இதன் பரிகாரமாக இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையை அவள் உரிமை விட வேண்டும். அதற்கு சக்தி பெற வில்லையெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். என இமாம்கள் சிலர் கூறியுள்ளனர். இச்செயல் உயிருடன் புதைப்பதற்குச் சமம் என அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கருவறையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்று தெரியாத வரை அதைக் கலைப்பது கூடாது என ஷேக் முஹம்மத் இப்ராஹீம் தம் ஃபத்வாத் தொகுப்பில் 11ழூ ழூ151 ல் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியில் உள்ள மார்க்க அறிஞர்களின் சபை 20.06.1407 ஹிஜ்ரியில் வெளியிட்டுள்ள தன் தீர்மானம் 140ல் பின்வருமாறு கூறியுள்ளது.
1. இஸ்லாம் கூறக்கூடிய மிக நெருக்கடியான எந்தவித மான காரணமும் இல்லாதபோது கருக்கலைப்புச் செய்வது கூடாது.
2. முதல் ஆரம்ப நாற்பது நாட்களில் குழந்தை வளர்ப்பு சிரமம் என்பதற்காகவோ அல்லது அவர்களை வளர்ப் பதும் அவர்களுக்கு கல்விபோதிப்பதும் முடியாது என்ற பயத்தின் காரணத்திற்காகவோ, அல்லது அவர் களின் எதிர்காலத்தைப் பயந்தோ அல்லது தங்களிடமுள்ள குழந்தைகள் போதும் என்று கருதியோ கருக்கலைப்பு செய்வதுகூடாது.
3. கருவறையில் உள்ளது சதைக்கட்டியாக இருக்கும் நிலையில் அது கருவில் இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்துநேர்ந்துவிடும் என உறுதியான மருத்துவ சான்று இல்லாதவரை கருக்கலைப்பு செய்வது கூடாது. எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு கடைசியாகத்தான் இந்தமுடிவிற்கு வரவேண்டும்.
4. கற்பத்தின் மூன்றாவது நிலையான நான்கு மாதகாலம் ப+ர்த்தியான பின்பு ஏதோ காரணங்களினால் குழந்தை தாயின் கற்பத்தில் இருப்பது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்குழு உறுதிசெய்யாத வரை கருவைக் கலைப்பது கூடாது. கற்பத்திலுள்ள குழந்தையைக் காப்பாற்றுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபிறகே இந்த முடிவிற்கு வரவேண்டும். இந்த நிபந்தனைகளோடு கருவைக் கலைப்பதற்கு காரணம், இரண்டு விதமான தீங்குகளில் பெரியதீங்கை தடுத்து நிறுத்துவது கடமை என்ற அடிப்படையிலும், இரண்டு நலன்களில் சிறந்ததை தேர்வு செய்யவேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் உறுதியோடும் இறையச்சத்து டனும் செயல்படுமாறு இச்சபை கேட்டுக்கொள்கிறது.
”பெண்களுக்கான இயற்கை இரத்தம் என்ற பெயரில் உள்ள நூலில் ஷேக் முஹம்மத் இப்னு உஸைமீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ”கருவறையில் உள்ளதை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உயிர் ஊதப்பட்ட பின்னர் கருக்கலைப்புச் செய்வது சந்தேகமின்றி தடை செய்யப்பட்டதாகும். நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்ததாகக் கருதப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யில் தடைசெய்யப்பட்டுள்ள உயிரை கொலைசெய்வது விலக்கப்பட்டதாகும். மேற்கூறப்பட்டதில் பக்கம் – 60
‘அஹ்காமுன்னிஸா’ என்ற நூலில் பக்கம் 108 ல் இப்னு ஜவ்ஸி குறிப்பிடுகிறார்: திருமணம் செய்வதன் நோக்கமே மகப்பேறுக்காகத்தான். எல்லா நீரிலிருந்தும் குழந்தை ஏற்பட்டுவிடாது. குழந்தை உருவாக்கப்பட்டு விட்டால் நோக்கம் நிறைவேறிவிடும். அதைக் கலைப்பது அடிப்படை நோக்கத்திற்கு மாற்றம் செய்வதாகும். கருவறையில் உயிர் ஊதப்படுவதற்கு முன்னால் கற்பத்தின் ஆரம்ப காலத்தில் கருக்கலைப்பு செய்வது பெரிய பாவமாகும். உயிர் ஊதப்பட்ட பின்னர் செய்யப்படும் கருக்கலைப்பை விட குறைந்த குற்றம்தான் இதற்கு. உயிர் ஊதப்பட்டதை கலைப்பது இறைநம்பிக்கையாளன் ஒருவனைக் கொலை செய்த குற்றத்திற்கு சமமானதாகும்.
”உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.” (அல்குர்ஆன் 81:8,9)
இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! எந்த நோக்கத்திற்காகவும் இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந் தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.