Blogger Widgets

பெண்கள் கிரகணத் தொழுகையில் கலந்துகொள்ளலாமா?

சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஏற்படும் போது கிரகணம் அகலும் வரை நபி (ஸல்) அவர்கள் பிரத்யேகமாக தொழுதுள்ளார்கள். சூரியன் சந்திரன் பூமி ஆகிய
மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. இந்த மூன்று கோள்களும் ஒன்றையொன்று இழுத்து மோதிவிட்டால் உலகம் அழியும் நிலை ஏற்படும். 
இந்த இக்கட்டான நிலையில் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதும் தனக்கு பாதுகாப்பை கொடுக்குமாறு கேட்பதும் அவசியமாகிறது. இத்தொழுகையில் பெண்களும் கலந்துகொண்டுள்ளார்கள். எனவே கூட்டாகத் தொழப்படும் இத்தொழுகையில் பெண்கள் கலந்துகொள்வது நபிவழியாகும்.

(ஒரு முறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலிலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலிலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலிலி) அவர்களிடம், "மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?'' என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலிலி) அவர்கள் வானை நோக்கி (த் தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்த) "சுப்ஹானல்லாஹ்' (-அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது "(இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலிலி) அவர்கள் "ஆம்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன். 
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரி (86)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.