Blogger Widgets

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதிலும் பெண்கள் மற்ற பெண்களுக்கு இமாமத் செய்வதிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யக்கூடாது
என்று ஏராளமான அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கூற்றுத் தான் சரியானது. ஏனென்றால் மார்க்கத்தில் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்க வேண்டும். குறிப்பாக வணக்கவழிபாடுகள் தொடர்பாக ஒரு சட்டத்தைக் கூறும் போது மறைமுகமாக இல்லாமல் தெளிவான அடிப்படையில் ஆதாரம் இருக்க வேண்டும்.

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா என்ற் பிரச்சனை வணக்கம் தொடர்பானது என்பதால் அதற்கு தெளிவான அடிப்படையில் ஆதாரம் தேவை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்ததாக எந்த ஒரு ஹதீஸையும் இல்லை. 
இமாமத் செய்கின்ற விஷயத்தில் ஆண்களுக்குரிய சட்டத்தையே பெண்களுக்கும் கூற இயலாது. ஏனென்றால் தொழுகையில் நிற்கும் போது பெண் இறுதியில் தான் நிற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படி இருக்கும் போது ஆண்களை முந்திக்கொண்டு ஒரு பெண் எப்படி முன்னால் வந்து இமாமத் செய்ய முடியும்,?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 
(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (749)


தொழுகையாளின் கவனத்தை திருப்பும் எந்த ஒரு பொருளையும் பார்வைபடும் விதத்தில் வைக்கக்கூடாது என்று தடை உள்ளது. கண்டிப்பாக பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்க்கு பொருளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
தொழுக்கூடியவரின் கவனத்தை திருப்பும் எந்தப் பொருளும் வீட்டில் இருப்பது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)
நூல் : அபூதாவுத் (1735) 


பெண்களின் குரல் ஆண்களின் கவனத்தை திருப்பிவிடும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் பெண்கள் தொழுகையில் சப்தமிடுவதற்கு அனுமதி தரவில்லை. மாறாக இமாம் செய்த தவறைச் சுட்டிக்காட்டி அவர்கள் கைதட்ட வேண்டும் என்று கூறினார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும். 
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (1203)


எனவே ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யவது கூடாது என்பதே சரியானதாகும்.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.