Blogger Widgets

வெளியில் செல்லும்போது


ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.
”நாம்
இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவே லர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல் வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களை யும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அஹ்கா முன்னிஸா’ எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள்.
இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்க வேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டா லும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதை களிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.
4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நிலை ஏற்பட்டால் ஆண்களுக்குப்பின்னால் தனியாக வரிசையில நிற்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தொழும்போது நானும் ஓர் அநாதையும் வரிசையில் நின்றோம் எங்களுக்குப் பின்னால் வயது முதிர்ந்த பெண் நின்றாள்” என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
”எங்களுடைய வீட்டில் நானும், ஓர் அநாதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். எங்களுடைய தாயார் உம்முசுலைம் எங்களுக்குப் பின்னால் நின்றார்” என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
”ஜமாஅத் தொழுகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கள் வருவார்களானால் ஆண்களுக்குப்பின்னால் வரிசையாக நிற்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வருசைப்படுத்தும் போது ஆண்களை முன் வரிசையிலும் அவர்களுக்குப் பின்னால் சிறுவர் களையும் அவர்களுக்குப் பின்னால் பெண்களையும் நிறுத்துவார்கள்” (நூல்: அஹ்மத்)
”ஆண்களின் வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையா கும், அதில் சிறப்புக் குறைந்தது கடைசி வரிசையாகும். பெண்களின் வரிசையில் சிறந்தது கடைசி வரிசையாகும். அதில் சிறப்பு குறைந்தது முதல் வரிசையாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் பின்வரும் விஷயங்களை அறிவிக்கின்றன. பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் வரிசையாக நிற்கவேண்டும். கடமையான தொழுகையானாலும் ரமளானில் தொழும் இரவுத் தொழுகையானாலும் தொழும்போது சிதறியவர்களாகத் தொழக் கூடாது.
5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் தங்கள் ஒரு கையின் மேல் மற்றொரு கையை தட்டி ஞாபகமூட்ட வேண்டும்.
”தொழுகையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடுமாயின் ஆண்கள் ‘தஸ்பீஹ்’ சொல்லட்டும். பெண்கள் ஒரு கையின் மேல் இன்னொரு கையை அடிக்க வேண்டும், என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
ஜமாஅத் தொழுகையில் ஏதாவது தவறு நிகழும் போது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியாகும். காரணம் பெண்களின் குரல் ஆண்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியதாகும். எனவே கையில் அடிக்கும்படியும், பேசமால் இருக்கும் படியும் ஏவப்பட்டுள்ளாள்.
இமாம் ஸலாம் சொல்லி விடுவாரானால் பெண்கள் ஸலாம் கொடுத்துவிட்டு விரைவாக பள்ளியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்
ஆண்கள் அமர்ந்திருக்க வேண்டும் திரும்பிச் செல்லும் பெண்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஏற்படாதிருக்க இவ்வாறு செய்ய வேண்டும். உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.
கடமையான தொழுகைகளிலிருந்து பெண்கள் ஸலாம் கொடுத்துவிடுவார்களானால் அவர்கள் எழுந்து சென்றுவிடுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆண்களும் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்த பின்னர் மற்றவர்களும் எழுந்து செல்வார்கள்.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.