Blogger Widgets

ஹஜ்ஜின்போது மாதவிடாய்ப் பெண்கள் ...


 ஹஜ்ஜின்போது மாதவிடாய்ப் பெண்கள் கடை பிடிக்கவேண்டியவை.
மாதவிடாய்ப் பெண் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிதல், அரஃபா மைதானத்தில் நிற்குதல், முஸ்தலிபா வில் இரவு தங்குதல்,
ஜம்ரத்தில் கற்களை ஏறியுதல் போன்ற எல்லா காரியங்களையும் செய்யவேண்டும். தவாஃப் மட்டும் செய்யக்கூடாது. தூய்மையான பின்பு தவாஃப் செய்யவேண்டும்.
மாதவிடாயாக இருந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஹாஜிகள் செய்கின்ற எல்லாவற்றை யும் நீ செய்துகொள்! சுத்தமாகும் வரை கஅபாவை தவாஃப் மட்டும் செய்யாதே! என்று கூறினார்கள்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் ”ஹாஜிகள் நிறை வேற்றுகின்ற எல்லாச் செயல்களையும் நீ செய்துகொள்! குளிக்கும் வரை தவாஃப் செய்யாதே!” என்று கூறியதாக உள்ளது. (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஷவ்கானி நைலுல்அவ்தார் என்ற நூலில் 5ழூ ழூ49 ல் கூறுகிறார்.
மாதவிடாய்ப் பெண் இரத்தம் நின்ற பின்பு குளிக்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதை இந்த நபிமொழி அறிவிக்கிறது. தடை செய்யப்பட்டிருக்கிற காரணத்தி னால் இத்தடையை யாராவது மீறி தவாஃப் செய்தால், அது வீணாம்விடும்.
ஸஃபா மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையில் ஸயீ எனும் தொங்கோட்டமும் ஓடக்கூடாது. ஏனெனில் கடமையான ஹஜ்ஜின் தவாஃப் செய்தப்பின்னரே ஸயீ செய்வது கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃப் செய்தபின்னர்தான் ஸயீ செய்துள்ளார்கள்.
இமாம் நவவீ மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ82 ல் கூறுகிறார்கள்.
ஒருவர் தவாஃப் செய்யும் முன்பாக ஸயீ செய்தால் அவரின் ஸயீ ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறுதான் அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர். இதில் கருத்து வேறுபாடு இல்லை என ‘மாவர்தீ’ என்பவர் கூறியுள்ளார். இவ்வாறே இமாம்களான மாலிக், அபூ ஹனீஃபா, அஹ்மத், ஆகியோரும் கூறியுள்ளனர்.
இப்னுல் முன்திர், அதாவு மற்றும் சில ஹதீஸ் கலை அறிஞர்களைத் தொட்டும் (தவாஃப் முன்பு ஸயீ செய்வது) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் என்னவென்றால் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃப் செய்தபின்னரே ஸயீ செய்தார்கள். மேலும் ”என்னிடமிருந்துதான் உங்களின் ஹஜ் கிரியைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காகச் சென்றேன். சில மக்கள் அவர்களிடத்தில் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! தவாஃப் செய்யும் முன்பே நாங்கள் ஸயீ செய்துவிட்டோம்’ என்றனர். இன்னும் சிலர் ‘நாங்கள் முற்படுத்தி விட்டோம்’; நாங்கள் பிற்படுத்தி விட்டோம் என பலவாறு கூறப்பட்ட போதெல்லாம், குற்றம் இல்லை. ஒரு முஸ்லிமின் மானத்தை அநியாயமாக பங்கப்படுத்தியவன்தான் நாசமாவான் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளும்போது மட்டுமே அவன் அநீதி இளைத்தவனாக ஆகிறான். அவன்தான் நாசமாம் குற்றமிளைத்தவன்.’ என்று கூறினார்கள்” என இப்னு ஷுரைஹ் (ரழி) அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)
இங்கே தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்தேன் என்பதின் பொருள், மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபிற்குப் பின்னர் ஹஜ்ஜின் தவாஃபிற்கு முன் ஸயீ செய்தேன் என்பதாகும் என கத்தாபி தெரிவித் துள்ளார்.
முஹம்மத் அமீன் »ன்கீதி தம் திருக்குர்ஆன் விளக்க வுரையான ”அள்வாவுல் பயான்” என்ற நூலில் 5ழூ ழூ252 ல் குறிப்பிடுகிறார்.
அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளதாவது தவாஃபிற்குப் பின்னரே அல்லாமல் ஸயீ செய்வது கூடாது. தவாஃப் செய்வதற்கு முன்னர் ஸயீ செய்தால் அது கூடாது. நான்கு இமாம்களும் மற்றவர்களும் இவ்வாறே கூறி யுள்ளனர். இது அனைவரின் ஏகோபித்த முடிவு என மாவர்தியும், மற்றவர்களும் கூறியுள்ளனர். பின்னர் முன்பு நாம் குறிப்பிட்ட இமாம் நவவியின் கருத்தை இங்கு குறிப்பிடுகிறார்.
இப்னு ஷீரைக்கின் ஹதீஸிற்குரிய பதிலையையும் குறிப்பிடுகிறார். பின்னர் குறிப்பிடுகிறார். ”நான் தவாபு செய்வதற்கு முன்பு” என்று கூறியிருப்பதன் பொருள் ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றான (தவாபுல் இபாளா) என்ற ஹஜ்ஜுடைய தவாபாகும். இது கடமையல்லாத தவாபுல் குதூமுக்குப் பின்னர் ஸயீ செய்தார் என்பதற்கு முரன்படாது.
முக்னி என்ற நூலில் 5ழூ ழூ240 ல் கூறப்பட்டுள்ளது.
ஸயீ என்பது தவாஃபை தொடர்ந்ததுதான். ஸயீ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன்பு தவாஃப் செய்திருக்கவேண்டும். தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்தால் அது கூடாது. இதையே இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ ஆகியோர் கூறியுள்ளனர். கூடும் என்பதாக அதாவு கூறியுள்ளார். மறந்து செய்தால் அது கூடிவிடும் என இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார். வேண்டுமென்றே செய்தால் அது கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
மறதியினாலோ, அறியாமையினாலோ முற்படுத் தியோ பிற்படுத்தியோ செய்துவிடும்போது என்ன செய்ய வேண்டும் எனக்கேட்கப்பட்ட கேள்விக்குத்தான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”குற்றமில்லை” என்று கூறினார்கள்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாஃபிற்குப் பிறகு ஸயீ செய்துள்ளார்கள். உங்களின் ஹஜ் கிரியைகளை என்னிட மிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவாஃபிற்கு முன்பு ஸயீ செய்வது கூடும் எனக் கூறுவோர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் ஹதீஸில் அதற்கு உண்டான எந்த சான்றும் இல்லை என்பதை மேற் கூறப்பட்ட செய்தியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில் அந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களில் ஒன்றுக்குத் தான் ஆதாரமாக அமையும். 1. ஹஜ்ஜுடைய தவாஃப் செய்வதற்கு முன்னர் ஒருவர் ஸயீ செய்தால், அவர் மக்காவில் நுழையும்போது செய்யும் தவாஃப் செய்து அத்துடன் ஸயீயும் செய்தால் அந்த ஸயீ தவாஃபிற்குப் பின்புள்ள ஸயீயாகவே கருதப்படும். 2. அல்லது அறியாமையினாலோ மறதியினாலோ செய்துவிட்ட வராகக் கருதப்படுவார்.
இதில் கொஞ்சம் அதிகப்படியாகக் கூறியதன் காரணம், பொதுவாக தவாஃபிற்கு முன்னர் ஸயீ செய்வது கூடும் என வாதிடும் சிலர் தற்போது உருவாகியுள்ளனர்.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.