இறைவன் முதல் மனிதனை மண்ணால் படைத்து அவரிலிருந்தே அவருக்கு ஒரு துணையையும் படைத்தான். அதன் பிறகு
அந்த இருவரின் மூலமாக மனிதவர்க் கத்தைப் இந்திரியதைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.(அல்குரான் 53:46) (உங்களைப் படைக்கின்றான்).
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா (அல்குரான் 75:37)
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண் பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான் அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும்அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும். (அல்குரான் 35:11)
இதுபோன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் மனிதனை இந்திரியத் துளியைக் கொண்டு படைத்ததாக கூறுகின்றன.
இந்திரியத்துளியின் மூலமாக மனிதனை உருவாக்குவதற்காக இறைவன் தேர்வு செய்த இடம் தான் 1) தந்தையின் முதுகந்தண்டு. (இங்கு இந்திரியமாக மனிதக் கருவை சேமித்து வைத்தல்) 2) தாயின் கர்ப்பப்பை (இங்கு பல மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதன் உருவாக்குதல்) கர்ப்பக் கோளறை.
இதைத்தான் இறைவன் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின்னர் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து(பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை தெளிவாக விவரித்துள்ளோம். (அல்குரான் 6:98)
மனிதன் தனது தந்தையின் முதுகந்தண்டில் இருந்த இடத்தை குறிப்பதற்கு (‘தங்க வைக்கப்படுபவர்’) ‘முஸ்தாகர்ரு’ என்றும்
தாயின் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டதை (‘மறைத்து வைக்கப்படுபவது’) முஸ்தவ்தா என்றும் (6:98)இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் சொன்னதாக இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அடுத்ததாக பல மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதனாக உருவாக்குதல். பலவிதமான மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதனாக உருவாக்கி அவனது விதியையும் நிர்ணயிக்கும் இடம்தான் கர்பக் கோளறை. இதைதான் இஸ்லாம் அர்ரஹ்ம் கர்ப்ப கோளாறை.
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 7379)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "திண்ணமாக அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர்'இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு'' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது 'இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா?துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு? என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும். (புகாரி: 3333)
இறைவன் தான் விரும்புகின்ற விதத்தில் மனிதனைப்படைத்து அந்த மனிதனுடைய விதியையும் கர்ப்பக் கோளறையிலேயே நிர்ணயித்து விடுகின்றான். இதை ஒருவன் மறுத்தால் அவன் முஸ்லிமாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுகின்றான். இது ஈமானைச் சார்ந்தது.
அடுத்து ஒரு பெண் கருவுற்றால் அவளுக்கு ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன? அவளுக்கு ஏற்ப்படும் கஷ்டங்கள் என்ன? அவள் பேணவேண்டிய ஒழுங்குகள் என்ன என்பது என்பது பற்றி மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றதைப் பார்ப்போம்.
கர்ப்பம் அறிகுறிகள்
கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்ஸ
1. மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக் காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும்.
இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக,புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணி யாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மன நிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும். நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள்,ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள்,உடல்பருமன், அனோ ரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற வற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாத விலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
2. களைப்பு
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு,மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
3. மசக்கை
இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற் கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப் பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப் பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத் திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்தநாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.
அதுசரி, இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார் மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும்,வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும்,மண்ணையும், அடுப்புக்கரியையும்,சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.
இதற்கு காரணம் என்ன?
இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக் குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்பகாலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறி குறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும்,அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி,மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
5. மார்பகப் பகுதி மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு,குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப் புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.
6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
7. வயிறு பெரிதாகுதல்
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக18 முதல் 20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறி களாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.