Blogger Widgets

ஒட்டுமுடி வைக்கலாமா?

ஒட்டுமடி வைத்துக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே,
அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம்  கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும்  அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துகின்றான்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5934)

பெண்கள் மொட்டை அடிக்கலாமா?

பெண்கள் முடியை குறைத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் மொட்டையடிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 
பெண் தலையை மொட்டையடித்துக் கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : நஸயீ (4963)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மொட்டையடிப்பதென்பது பெண்களுக்குக் கிடையாது. முடியை குறைத்துக்கொள்வது தான் அவர்களுக்கு உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : தாரமீ (1826)

தலையில் புண் இருந்தாலோ முடி வைப்பதினால் நோய் ஏற்பட்டாலோ அப்போது மொட்டையடிப்பதில் தவறில்லை. உடல்நலத்தை கவனத்தில் கொண்டு சிறுமிகளுக்கு மொட்டையடிப்பதும் தவறில்லை.

பச்சை குத்திக்கொள்ளக் கூடாது

இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அழகிற்காக பற்களை செதுக்கிக்கொள்கிறார்கள். அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை மளித்து விட்டு விரும்பி வடிவில் செயற்கையாக புருவங்களை வைத்துக்கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரை உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். இதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.     
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)

விதவைப் பெண்கள் அலங்கரித்துக்கொள்ளலாமா?

கணவனை இழந்தை பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மாத்திரம் அலங்காரம் செய்யாமல் தவிர்த்துக்கொள் வேண்டும். அதற்குப் பிறகு அவர்கள் பூ வைத்துக்கொள்ளலாம். வண்ண ஆடைகளை உடுத்தலாம். தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்ளலாம். விரும்பியவாறு தன்னை அலங்கரித்துக்கொள்ளலாம். 
ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் விதவைப் பெண்கள் அலங்கரிக்கக்கூடாது. வண்ண ஆடைகளை உடுத்தக் கூடாது என்றெல்லாம் பலவிதமான மூட நம்பிக்கைகள் நிலவுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் கொடுமையாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.