Blogger Widgets

பெண் சிசுக்கொலை - இஸ்லாத்தின் பார்வையில்.


பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.


இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப்பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று வேறு அழைக்கின்றனர்.

பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -

“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)

வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.

நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)


இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.

‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)

‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)

இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)

‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)

எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக!

இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :  
மேற்கண்ட காரணங்களால் குறைந்து கொண்டே வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தால் கீழ்க்கண்ட பின் விளைவுகள் ஏற்படலாம் -

1. 2030 
இல் இந்தியாவில் பெண் குழந்தைகளை விட ஆண்கள் 20 சதவிகிதம் அதிகமாக இருப்பார்களென்று லண்டனின்  சர்வதேச சுகாதார மற்றும் வளர்ச்சிக்கான யு.சி.எல். மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல் சீனாதென் கொரியா ஆகிய நாடுகளிலும்100 பெண் குழந்தைகளுக்கு105 ஆண் குழந்தைகள் என்ற வீதத்தில் பிறக்கின்றனர்.  

 2.   
இந்தியாவில் ஆண்,பெண் இடையிலான பிறப்பு விகிதம் பெரியளவில் குறைந்து வருவதால்2030 இல் இரு பாலாருக்குமிடையிலான வித்தியாசம்20 சதவிகிதமாகஇருக்குமென்று புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில்  பஞ்சாப்டில்லிகுஜராத் ஆகிய வடக்கு மாநிலங்களில் ஆண்,பெண் பாரபட்சம் அதிகளவில் காணப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த வித்தியாசம் குறைந்து காணப்படுகிறது.   

3. 
குழந்தை பெற்றுக் கொள்வதில் பாரபட்சம் காட்டப்படுவதால் சமூகத்தில் ஆண்கள் திருமணம் செய்யத் தேவையான பெண்கள் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவும்.  

4. 
உரிய வயதில் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் தாமதமாவதால் திருமணத் தடை ஏற்பட்டு  மனச் சிதறல் அடையும்  பலகீனமான ஆண்களினால் சிறுமிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலைசிசுக் கொலைகள்பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக  இருக்கிறதாம். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஆண்பெண் பிறப்பின விகிதாச்சார அடிப்படையிலான புள்ளி விவரங்கள்: 

2001 
பாலின விகிதாச்சாரப்படி  0-6 வயதிற்குள்ளான குழந்தைகளுள்1000 சிறுவர்களுக்கு 927சிறுமிகள் மட்டுமே இருந்தனர்.  இப்பொழுது வெளியான2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில்  1000 சிறுவர்களுக்கு914 சிறுமிகள்தான் உள்ளனர். 
பாகிஸ்தான்வங்கதேசம்ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்கள் சதவிகிதம் குறைந்து  காணப்படுகிறதுஎன்று ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   இதுகுறித்து ஐ.நா. அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது: 
இந்தியாவில் பெண்கள் பிறப்பு விகிதம்48.2. ஆனால் பாகிஸ்தானில்48.5 சதவிகிதமும்வங்க தேசத்தில்48.8 சதவிகிதமும்,  ஜப்பானில்51.1 சதவிகிதமும் பெண்களின் பிறப்பு விகிதம் உள்ளது. 
இந்தியாவில் கடந்த2007ஆம் ஆண்டு நிலவரப்படிகோடிக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அதே  கால கட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில்61 லட்சமாகவும்வங்கதேசத்தில்32 லட்சமாகவும்  இருந்தது.   
இந்தியாவில்1990இல்1000க்கு83 குழந்தைகள் சாவு என்றிருந்த நிலை, 2006இல்1000க்கு57என குறைந்துள்ளது. 
உலகில் மிகவும் ஏழ்மையானவர்களில்10இல்பேர் பெண்கள். பெரும்பாலான வன்முறைகளுக்கு பெண்களே  இலக்காகிறார்கள்.

30 
ஆண்டுகளில் இந்தியாவில்1.2 கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டாயிரம்  பெண் சிசுக்கள் இந்தியாவில் அழிக்கப்படுவதாக ஐ.நா.,தெரிவித்துள்ளது. 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறையில் கருவிலேயே பெண்ணை கண்டுபிடித்து அழிக்கின்றனர். இதை தடுக்க மத்தியமாநில  அரசுகள் கடும் சட்டங்களை இயற்றியுள்ளன.கருபாலினம் கண்டறிந்து தெரிவிப்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறையும்ஒரு ல ட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டம் வழிசெய்கிறது.

கருவுற்ற சீனப் பெண்கள், ஸ்கேன் மூலம் தன் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொண்டவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள். மாறாக பெண் குழந்தையாக இருந்தால் கருவைக் கலைத்து விடுகின்றனர். 

இதனால் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாக இல்லாமல் ஆண் விகிதம் மட்டும் அதிகமாகி விட்டது.

1970ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ‘ஒரு குழந்தை’ குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், பெண்கள் சதவிகிதம் கு றைவதற்கு காரணமாகி விட்டது. ஒரு சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருந்தால் அச்சமுதாயத்தில் கு ழந்தைப் பிறப்பும் குறைவாகவே இருக்கும்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இவ்வொரு குழந்தைச் சட்டத்தால்’  தற்சமயம் திருமண வயதை அடைந்த ஆண்களில் அநேகருக்கு பெண்கள் கிடைக்காது அல்லாடுகின்றனர். இதனால் அண் டை நாடுகளான தென்கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை மணமுடித்து தம் சீன நாட்டிற்கு  அழைத்துச் செல்கின்றனர்.
தமிழக மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் :
தமிழக மக்கள் தொகை 7,21,38,958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில்வசிப்பவர்கள். இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில் தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,38,958 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்ப ட்டோர் அதாவது 52 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். தலைநகர் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட  முக்கிய நகரங்களில் 48 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை
3,71,89,229 ஆகும்.
பெண்களின் எண்ணிக்கை 3,49,49,729 ஆகும். தேசிய அளவில் பெரிய மாநிலங்களில் பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந் தைகளின் மரண விகிதம்
இந்திய மாநிலங்களில் ஒரு வருடத்திற்குள் பிறக்கும் 1000 குழந்தைகளில் பிறக்கும் போதே இறந்து பிறக்கும் குழந் தைகளிடையே நடத்தப் பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்கு கீழே:
1. ஆந்திர பிரதேசம் 52
2. அஸ்ஸாம் 64
3. பீகார் 56
4. சட்டீஷ்கர் 57
5. டெல்லி 35
6. குஜராத் 50
7. ஹரியானா54
8. ஹிமாச்சல் பிரதேஷ்44
9. ஜம்மு & காஷ்மீர் 49
10. ஜார்கண்ட் 46
11. கர்நாடகா 45
12. கேரளா 12
13. மத்தியப் பிரதேசம்70
14. மகாராஷ்டிரா 33
15. ஒரிஸ்ஸா 69
16. பஞ்சாப் 41
17. ராஜஸ்தான் 63
18. தமிழ்நாடு 63
19. உத்தரப் பிரதேசம்67
20. மேற்கு வங்கம் 35
35% of the developing world’s low birth weight babies are born in India. 40% child malnutrition in the developing world is in India. 
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.