Blogger Widgets

மன அழுத்தமும் அதன் விளைவுகளும்.

மன அழுத்தம் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பதுடன் அதனை உணர்ந்திருப்பர். ஏனெனில், இன்றைய சூழலில் இது தவிர்க்கவியலாதது.நீங்கள் உங்களுக்குச் சாதகமான நடவடிக்கை என நினைக்கும் காரியங்களால் கூட உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம்.எடுத்துக்காட்டாக உங்கள் பதவி உயர்வு கூட மன அழுத்தத்தைக் கொண்டு வரலாம். மேலும் விடுமுறை, திருமணம் போன்றவையும் இதில்
அடங்கும். இவையன்றி உங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் காரியங்களாலும் கூட மன அழுத்தம் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக வேலையிழப்பு,விவாகரத்து, நேசித்தவர்களின் மரணம் போன்றவையும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம்.


வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் உங்களின் நிலைப்பாட்டினைப் பொருத்து மன அழுத்தம் ஏற்படும். உங்களுக்கு கடுமையாக மன அழுத்தம் ஏற்படும் போது உங்கள் உடலும் அதிசக்தியுடன் செயற்பட்டு அதற்கு ஈடு செய்ய வேண்டும். மன அழுத்தத்தின் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாசம் அதிகரிக்கும், உங்கள் மூலைக்கும் தசைகளுக்கும் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரத்த சர்க்கரை அளவும்,இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் காரணி விலகியவுடன் உங்கள் உடல் மீண்டும் தளர்வடையும்.

மன அழுத்தம் குறுகிய காலமே இருக்கும் அல்லது நாள்பட்டும் நீடிக்கலாம். நாள்பட்டு ஏற்படும் மன அழுத்தம் நீண்ட காலம் நீடிக்கும் பிரச்சினைகளால் ஏற்படும். குறிப்பாக தனிமை, நிதிச்சுமை, நீண்ட வேலை நாட்கள் போன்றவற்றால் ஏற்படும். எப்போதாவது ஏற்படும் மன அழுத்தத்தினை நீங்கள் ஓரளவு எளிதில் கையாள இயலும். ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் போது அவை இணைந்து உங்களுக்கு சிக்கலை அதிகரிக்கும்.

மன அழுத்தம் காரணமாக பல உடலியல் பிரச்சினைகள், மன ரீதியான பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை உங்கள் உடலை நோய்வாய்ப்படுத்தலாம் அல்லது ஏற்கனவே உள்ள நோயினை தீவிரப்படுத்தலாம். சில வேளைகளில் நோய் ஏற்படும் சிக்கலை தீவிரப்படுத்தி உங்களை நோய்க்கு ஆளாக்கலாம். மன அழுத்தம் கீழ்க்கண்ட விளைவுகளை உங்கள் உடல் நலத்தில் ஏற்படுத்தலாம். 

1. நோய் எதிர்ப்புத்திறனைக் குறைக்கும்.
மன அழுத்தத்தின் போது உடலில் சுரக்கும் கார்டிசால் எனும் நாளமில்லாச் சுரப்பு காரணமாக உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து உடல் நோய்க்கு ஆளாகிறது. பல ஆய்வுகள் மன அழுத்தத்தால் காச நோய், ஸ்ட்ரேப் டோகாக்கல் ஏ வகை கிருமிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன. மேலும் உயர் சுவாசக்குழல் தொற்றுகளான தடிமன் போன்றவைகளும் ஏற்டலாம்.

2. இதய நோய்கள் அதிகரிக்கும்.
திடீர் மன அழுத்தத்தின் போது உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கின்றது. எனவே உங்களுக்கு இதயத்துடிப்பு ஒழுங்கீனமாவதுடன் இதய வலியும் ஏற்படலாம். நீங்கள் கூடுதலாக எதிர்விளைவுகள் காட்டுபவராக இருந்தால் உங்களுக்கு மாரடைப்புக் கூட ஏற்படலாம். இதயத்துடிப்பு மிகவும் அதிகரிப்பதுடன் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இதன் விளைவுகள் இதய இரத்த நாளங்களிலும் இதயத்திலும் பின்னர் வெளிப்படும்.மன அழுத்தம் காரணமாக இரத்தம் உரையும் தன்மை அதிகரித்து மாரடைப்பு ஏற்படலாம். 

3. நோய்களை தீவிரப்படுத்தும்.
நோய்களுக்கும் மன அழுத்தத்திற்குமான உறவு பற்றி மிக தெளிவில்லை. எனினும் மன அழுத்தத்தால் பல நோய்களின் நோய்க்குறிகள் மிகைப்படைய வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு ஆஸ்துமா, இரைப்பை குடல் நோய்கள், நாள்பட்ட வலி, மன நலப்பிரச்சினைகள் போன்ற நோய்களை மிகைப்படையச் செய்யும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் முறைகள்.

மெல்லச் செய்யும் தசைத்தளர்வு நடவடிக்கைகள்

வசதியாக உட்கார்ந்து கொள்ளவும் அல்லது படுத்துக் கொள்ளவும். கண்களை மூடுங்கள். தாடையைத் தளர்த்தி விடுங்கள். கண்களை இருக்கி மூடாமல் தளர்வாக வையுங்கள்.

உங்கள் உடலை மனம் மூலம் படம் பிடியுங்கள். கால்களிலிருந்து தலைவரை ஆராயுங்கள். ஓவ்வொரு பாகத்தையும் கூர்ந்து கண்காணிக்கவும். மெல்ல உங்கள் உடல் தளர்வுறுவதாக உணருங்கள்.

உங்கள் உடலின் ஒரு பகுதி தசைகளை இருக்கமாக்கி ஐந்து எனும் வரை அப்படியே இருங்கள். பின்னர் தளர்த்தி மற்றப்பகுதியில் இது போலச் செய்யவும். 

பார்வையால் கற்பனை செய்தல்.

உங்கள் சிந்தனைக்குதிரையை தட்டி விடுங்கள். ஏதாவது ஒரு விடயத்தைப்பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள். நீங்களே உங்களுக்குத் தளர்வாக இருப்பதாகக் கூறிக் கொள்ளுங்கள். கைகள் சூடானால் குளிர்விக்கச் செய்யுங்கள். குளிர்ந்த கைகளை சூடாக்கவும். இதயம் மெல்லத் துளிர்ப்பதை உணருங்கள். 

மெல்ல நிதானமாக ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.

நீங்கள் மனம் தளர்வடைவதாக உணர்ந்தால் உங்களுக்குப் பிடித்த இடத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த மௌன நிலையிலிருந்து விடுபட்டு பழைய நிலைக்குத் திரும்புங்கள்.

தளர்வாக மூச்சு விடுங்கள்.

நன்கு பழகினால் மெல்ல ஆழ்ந்த மூச்சுவிடக் கற்றுக் கொள்ளலாம். வயிறு, மார்பு பக்கங்களில் இறுக்கமில்லாத, தளர்வான உடைகளை அணிந்து மல்லாக்கப் படுத்துக் கொள்ளுங்கள் இந்நிலையில் மனதை தளர்வு செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டதும் இதனை உட்கார்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் செய்துபாருங்கள். . 

நன்றி: மேயோ கிளினிக், உடல் நலக்கையேடு.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.