Blogger Widgets

அணிகலன்களை அணியலாம்

விரும்புகின்ற நகைகளை அணிவதற்கு பெண்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. தங்கம் வெள்ளி பிளாட்டினம் முத்து பவளம் போன்ற விலையுயர்ந்தப் பொருட்களை அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் ஆபரணங்களை அணிந்துள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலிலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.  அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலிலியுறுத்தினார்கள்.  அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலா னார்கள். பிலால் (ரலிலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
நூல் : புகாரி (98)

என்றாலும் இவையெல்லாம் அலங்காரம் என்பதால் இந்த அலங்காரத்தை அண்ணிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாது. 

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
அல்குர்ஆன் (24 : 31)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.