Blogger Widgets

பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?

இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தை பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான
எண்ணத்துடனும் பார்ப்பது தான் தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை திறந்திருந்தார்கள் என்பதை பல ஹதீஸ்களில் காணுகிறோம். 
உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அம்முறையில் இறந்தவரைப் பார்ப்பதில் குற்றமில்லை. உயிருடன் இருக்கும் போது எந்த எண்ணத்தில் மற்றவர்களைப் பார்க்கக்கூடாதோ அவ்வெண்ணத்தில் இறந்தவர்களையும் பார்க்கக்கூடாது. 

பட்டாடை அணியலாம்

ஆண்கள் பட்டாடை அணிவதற்கு தடை உள்ளது. ஆனால் பெண்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 
நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பüப்பாக) வழங்கினார்கள். ஆகவே, அதை நான் அணிந்துகொண்டேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கüன் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்கüடையே பங்கிட்டுவிட்டேன்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) 
நூல் : புகாரி (5366)

காவிநிற ஆடையை அணியலாம்
காவிநிறத்தை அதாவது குங்குமப்பூ நிறத்தை ஆண்கள் பயன்படுத்துவது கூடாது. பெண்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. 
ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5846)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.