Blogger Widgets

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்
.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி),
நூல் : புகாரி(5504)

இறுதியாக பெண்களுக்கு மாத்திரம் பிரத்யேகமான பல சட்டங்களை அறிந்துகொண்டோம். தொழும் முறை உளூ செய்யும் முறை தயம்மம் இன்னும் பல விஷயங்களில் ஆண்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு பொருந்தும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் தான் என்று கூறியுள்ளார்கள். 
பெண்கள் ஆண்களைப் போன்றவர்களாவார்கள். 
அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)
நூல் : அஹ்மத் (25869)

இவற்றைத் தெரிந்துகொள்ள நபிவழியில் தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள்.
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.